பதிவு செய்த நாள்
22
ஜூலை
2016
11:07
உடுமலை: உடுமலை சாய்பாபா கோவில் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் பல்லக்கு பவனி நடைபெற்றது. உடுமலை தில்லலை நகர் சாய்பாபா கோவில் மூன்றாம் ஆண்டு விழா கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டு வந்தது. முதல் நாள் காக்கட ஆரத்தியுடன் ஆரம்பித்த சிறப்பு பூஜைகள், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மாலையில், பெண்கள் கலந்துகொண்ட விளக்கு பூஜையும் நடந்தது. இரண்டாம் நாள், சாய்பாபாவிற்கு, காலையில், 108 வலம்புரி சங்காபி ேஷகமும், சிறப்பு அலங்கார, ஆராதனையும் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, ருத்ரப்பா நகர், சௌதாமலர் லே–அவுட், ராமசாமி நகர் வழியாக வாணவேடிக்கை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா வரப்பட்டது. கடைசி நாளான நேற்று காலை, 5:30 மணிக்கு, பிரம்மஸ்ரீ குமார் பாகவதர் குழுவினரின் சங்கீத நிகழ்ச்சியும், மாலை, 7:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் பாபாவின் பல்லக்கு பவனியும் நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு அபிேஷக, அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.