பதிவு செய்த நாள்
22
ஜூலை
2016
11:07
கும்மிடிப்பூண்டி: பெத்திக்குப்பம், ஏகவள்ளி அம்மன் கோவிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு, அம்மன் வீதியுலா நடைபெற்றது. கும்மிடிப்பூ ண்டி அடுத்த, பெத்திக்குப்பம் கிராமத்தில் உள்ள ஏகவள்ளி அம்மன் கோவிலில், 19ம் தேதி, ஆடி திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு, முக்கிய நிகழ்வான அம்மன் வீதியுலா நடைபெற்றது. சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், மங்கள வாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன், வீதியுலா சென்ற அம்மனுக்கு, படையலிட்டு கிராமவாசிகள் வழிபட்டனர். சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்தவர்கள், திருவிழாவில் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.