பதிவு செய்த நாள்
22
ஜூலை
2016
12:07
கடலுார்: கடலுார் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் 29.30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான கூடத்தை, சென்னையில் இருந்தவாறு, முதல்வர் ஜெ., காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி, கோவில் வளாகத்தில் நடந்த விழாவில், அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர்கள் கொளஞ்சி, நாகராஜன், மேலாளர் முத்து, உதவி பொறியாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் முத்துக்குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.