மைசூரில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது தலக்காடு வைத்தியநாதர் ஆலயம். இங்கு மூலவருக்கு நேராக உள்ள கோபுர வாசல் தவிர மற்றொரு வாசலும் உள்ளது. இவ்வாசலை சொர்க்க வாசல் என்று அழைக்கின்றனர். பொங்கலன்று இரவு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக கிளம்பி சொர்க்க வாசல் வழியாக திரும்பி வருவர். இவ்வாசல் வழியாக வந்து வைத்தியநாதரை தரிசிப்பவர்கள் கைலாயத்தில் வாழும் பாக்கியத்தை அடைவர் என்பது நம்பிக்கை!