கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2016 04:07
கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித்தேர்த்திருவிழா நடந்து வருகிறது. காலை முத்து மாரியம்மன் மூலவர், உற்சவர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து திருகல்யாண பூஜைகள் துவங்கியது. விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம், அங்குரார்பணம் பூஜைகள் நடந்தது. மாரியம்மன் வரலாற்றில் உள்ள காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண மகிமைகளை கொளஞ்சி பாரதக்குழுவினர் விளக்கினர். யாகங்கள் நடந்தேறியபின் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணம் முடிந்து முத்துமாரியம்மன், காத்தவராயன், ஆரியமாலா, கற்பழகி சுவாமிகள் திருவீதியுலா உற்சவம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் நற்குணம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.