பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்கு செல்லும் புனித யாத்திரை, கடந்த 2-ம் தேதி(ஜூலை 2) தொடங்கி, அடுத்த மாதம் 18-ம் தேதி(ஆக., 18) நிறைவடைகிறது. அமர்நாத் பனிலிங்கத்தை கடந்த 23 நாட்களில், 2,02,500 பேர் தரிசனம் செய்துள்ளனர். ஞாயிறு மட்டும் 3,175 பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் 1,213 யாத்ரீகர்கள் கொண்ட புதிய குழு ஒன்று, 30 வாகனங்களில் நேற்று புறப்பட்டு சென்றது. காஷ்மீரில் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்ட பின் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக 3 முறை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, புனித யாத்திரை செல்லும் வழியே பாதுகாப்பு பணியில் 12,500 சி.ஆர்.பி.எப்., வீரர்களும், 8,000 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.