பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
விக்கிரவாண்டி: தொரவி கைலாசநாதர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், சங்கடகர சதுர்த்தி பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர், விநாயகருக்கு அருகம்புல் மாலையுடன் சிறப்பு அலங்காரம் செய்து, இரவு 7:30 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது. தொரவி ஊராட்சித் தலைவி நாகேஸ்வரி சங்கர், தொழிலதிபர் சுப்ரமணி, புதுச்சேரி தமிழ் சங்க நிர்வாகி கோவிந்தராஜூ, ஏனாதி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.