பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
11:07
தஞ்சாவூர்: தஞ்சையில், உலக நன்மை வேண்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மேலவீதியில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில், நேற்று, 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஒன்பதாம் ஆண்டு, 108 குத்துவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதை, தஞ்சை மேயர் சாவித்திரி கோபால், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில மகளிரணி செயலர் லலிதா சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். மேலவீதி கிளை தலைவர் ஸ்ரீதர் வரவேற்றார். தஞ்சை மாவட்ட தலைவர் ரகுநாதன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ராமகிருஷ்ணன், மாநில பொதுச் செயலர் வெங்கட்ராமன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில், குத்துவிளக்கிற்கு பல்வேறு அபிஷேங்கள் செய்யப்பட்டன. அதன்பின், உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், 108 குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்தனர்.