பதிவு செய்த நாள்
27
ஜூலை
2016
01:07
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, வடுகம் கோவில் பண்டிகையில் ஏற்பட்ட தகராறால் பதட்டம் ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், வடுகம் தண்டு மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி பண்டிகை நடப்பது வழக்கம். அதையடுத்து, அனைத்து பிரிவினரிடமும் பணம் வசூல் செய்து, பண்டிகைக்கான ஏற்பாடு நடந்தது. இந்நிலையில் நேற்று ஒரு குறிப்பிட்ட பிரிவினர், ’நாங்கள் பூஜை செய்ய தனியாக நாள் ஒதுக்க வேண்டும்’ என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக புகார் தெரிவிக்க, இரு பிரிவினரும் நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் குவிந்தனர். இரு பிரிவினரையும் விசாரித்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ”கடந்த காலங்களில் நடந்தது போல், திருவிழா நடத்த வேண்டும்; புதியதாக எதுவும் மாற்ற வேண்டாம்,” என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.