மனிதராகப் பிறந்தும் மிருக நிலைக்கு பலர் இழிந்து போகிறார்கள். மனிதராகப் பிறந்தும் மிகச் சிலரே தேவர் நிலைக்கு உயர்கிறார்கள். மனிதராகப் பிறந்தும் மனிதராக மனிதப் பண்புகளுடன் சிலரே சராசரி வாழ்க்கை வாழ்கிறார்கள். நாம் தேவராக உயரா விட்டாலும், மிருக நிலைக்குக் தாழ்ந்து போகாமல், சராசரி மனிதராகவாகிலும் வாழ வேண்டும்.