Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னசேலத்தில் பக்தர்கள் சாலை ... பச்சமலை முருகன் கோவிலில் சரிந்துபோன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக., 2ல் ஆடிப்பெருக்கு விழா: நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
12:07

சேலம்: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை விழாவையொட்டி, சேலம், நாமக்கல்லில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் நாமக்கல், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா ஆகியவை, வரும், ஆக., 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்டத்தில் இருந்து, ஆக., 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து, மேட்டூர், கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், ஒகேனக்கல்லுக்கும், நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், ப.வேலூர் வழியாக கொடுமுடி, பவானிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்செங்கோட்டில் இருந்து, கொடுமுடி, பவானிக்கும், சங்ககிரியில் இருந்து பவானி, ராசிபுரத்தில் இருந்து, காரவள்ளி மற்றும் கொல்லிமலை, காரவள்ளியில் இருந்து, அரப்பளீஸ்வரர் கோவில், இடைப்பாடியில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டியில் இருந்து கல்வடங்கம், தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் உள்ளிட்ட வழித்தடங்களில், பயண நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பயணிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar