பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
12:07
சின்னசேலம்: சின்னசேலத்தில், பால் குட ஊர்வலத்தை போலீசார் தடுத்ததால், பக்தர்கள் சாலை மறியல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், சின்ன÷ சலத்தில் பிரசித்திப் பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1994ம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது இருதரப்பி னரிடையே தகராறு ஏற்பட்டு, தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கோவிலில் எவ்வித உற்சவமும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், ÷ நற்று காலை 9:00 மணியளவில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக, திரவுபதி அம்மன் கோவிலை நோக்கி சென்றனர். பி ரச்னை ஏற்படுவதை தவிர்க்கும்வகையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆத்திரமடைந்த பக்தர்கள், போலீஸ் ஸ்டேஷன் எதிரில், சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மதிவாணன் மற்றும் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சமாதானம் செய்தனர். இந்த மறியலால், அப்பகுதியில் 30 நிமிடம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சின்னசேலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோவில் அருகில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.