பதிவு செய்த நாள்
01
ஆக
2016
01:08
உத்திரமேரூர்: விசூரில், திரவுபதியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவிலின் ஆடி திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மகாபாரதம், அர்ச்சுனன் தபசு, கீச்சகன் சம்ஹாரம், கிருஷ்ணன் தூது, பாஞ்சாலி சபதம், அபிமன்யு சண்டை, கர்ணன் மோட்சம் போன்ற நிகழ்ச்சிகள் சொற்பொழிவாகவும், தெருக்கூத்து நாடகமாகவும் நடத்தப்பட்டன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று, பதினெட்டாம் போரில் துரியோதனை பீமன் வீழ்த்தி வெற்றி கொண்ட படுகளம் காட்சி நடந்தது. இதில், விசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.