திருவாரூர்: தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான விளமல், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு ஆடிப்பூர பெருவிழா நடைபெறுகிறது.