எல்லாம் வல்ல அல்லாஹ் தனது பிரதிநிதியாக ஆதம் (அலை) அவர்களை நியமித்தார். இவருக்கு துணையாக ஹவ்வா (அலை) அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு சகல வசதியையும் செய்து கொடுத்த இறைவன், ஒரே ஒரு மரத்தின் பழங்களை மட்டும் உண்ண தடை விதித்தார். இறைவன் அஜாஜீலையும் படைத்தான். சுவர்க்கத்திலும், வானத்தில் இருந்து பூமி வரை கவனித்துக் கொள்ளும் பெரிய பொறுப்பு அஜாஜீலுக்கு தரப்பட்டது. ஆனால், இறைவனின் கட்டளையை மீறி, தடை செய்யப்பட்ட மரத்தின் பழங்களை சாப்பிட ஆதம் (அலை) அவர்களையும், ஹவ்வா (அலை) துõண்டிய காரணத்தால், அஜாஜீல் துõண்டியதால் கண்ணியத்துக்குரிய அந்தப் பெயர் மாற்றப்பட்டு இப்லீஸ் என்றும், ஷைத்தான் என்றும் வைக்கப்பட்டது. அவன் பாவங்களுக்குரிய காரணகர்த்தாவாக மாற்றப்பட்டான். பாவமன்னிப்புக்குரிய கதவு அவனுக்கு நிரந்தரமாக அடைக்கப்பட்டு விட்டது. அவனது பதவிப்பொறுப்பு அனைத்தும் பறிக்கப்பட்டது. இறைவனின் கட்டளையை மதிக்காதவர்களுக்கு இந்தக்கதி தான் ஏற்படும். இறைவன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் மூலம் விளக்கியுள்ளான். அந்தக் கடமைகளை மதித்து, அவனது அன்புக்கு பாத்திரமாவோம்.