பதிவு செய்த நாள்
19
செப்
2011
11:09
சேலம்: சேலத்தில், அன்னமாச்சாரியா பக்தர்கள் சார்பில், புரட்டாசி மாத பிறப்பையொட்டி, நேற்று வெங்கடேஸ்வரா மஹா புஷ்ப பூஜை நடந்தது. சேலம் வாசவி மண்டபத்தில் நடந்த பூஜையில் உற்சவர்களான ஸ்ரீநிவாஸா, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு கங்கா, யமுனை, சரஸ்வதி, பிரம்மபுத்திரா, சர்யு, கிருஷ்ணா, கோதாவரி, பம்பா, காவேரி போன்ற புனித தீர்த்தங்கள் கொண்டு பூஜை செய்து, 108 கலசங்கள், 108 புஷ்ப தட்டுகள், 108 லட்டுகள், 108 சங்குகள் வைத்து மஹா புஷ்ப பூஜை நடந்தது.திருவையாறில் தியாகராஜர் கீர்த்தனைகள் பாடும் நிகழ்ச்சியை போல, சேலத்தில் முதல் முறையாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அன்னமாச்சாரியா பக்தர்கள், 201 பேர் ஒன்று கூடி "ஸ்ரீ அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் இரவு 9 மணிவரை பாடினர். சேலம், திருமால் இறைப்பணிக்குழு சேர்மன் சிவானந்தம் தலைமையில் தாளப்பாக்க ஸ்ரீஹரி நாராயண சுவாமிஜி தம்பதிகளை வாழ்த்தினார்.அன்னமைய்யா ஆஸ்ரமம் டிரஸ்டி தலைவர் குப்புலு, துணைத்தலைவர் நாராயணன், மனோன்மணி அப்பு, வேணுகோபால், குணசேகரன், பாண்டுரங்கன், சர்வேஸ்வரன், குப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.