விட்டில் ராஜ பெருமாள் கோவில் காக்கப்பட பொதுமக்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2016 01:08
உத்திரமேரூர்:சாத்தணஞ்சேரியில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும், விட்டில் ராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் இந்து அறநிலையதுறைக்கு சொந்தமான, விட்டில் ராஜ பெருமாள் கோவில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதியில் சிறந்த வழிபாட்டுத்தலமாக இருந்த இக்கோவில், சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து உள்ளது. கோவில் கருவறையில் இருந்த உற்சவர் சிலை மற்றும் பிற, ஐம்பொன் சிலைகளை கோவில் நிர்வாகத்தினர் சீட்டஞ்சேரி, காலீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பிற்காக வைத்து உள்ளனர். எனவே, இக்கோவிலை சீரமைத்து, கோவிலில் மீண்டும் சுவாமி சிலைகளை வைத்து வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி வாசிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.