முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோவில், ஆடி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை கீழத்தெருவில், மூலஸ்தம்மன் கோவிலில், மூன்றாவது வாரம் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். 16வது ஆண்டின் ஆடி திருவிழாவை முன்னிட்டு, 29ம் தேதி கரக அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். 30ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மூன்றாவது நாள் திருவிழாவில், நேற்று முன் தினம் பகல், 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது; இரவு, 9:00 மணிக்கு, மூலஸ்தம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். முத்தியால்பேட்டை கிராமத்தை சுற்றியுள்ள பல கிராமவாசிகள் அம்மனை வழிபட்டு சென்றனர்.