சாயல்குடி: சாயல்குடி அருகே டி.எம்.கோட்டையில் உள்ள செஞ்சடைநாதர் சிவன் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று காலை 9.23 மணிக்கு குரு பகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியானதை முன்னிட்டு, தெட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ராசி, நட்சத்திரங்களை கூறி பக்தர்கள் சங்கல்ப பூஜைகளை செய்தனர்.