சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் உள்ள கோவில்களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சின்னசேலம் சிவன் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு, சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல், கன்னிகாபரமேஸ்வரி அம்மன், விஜயபுரம் செல்வமுருகன் கோவிலிலும், உலகியநல்லுார் அர்த்தனாரீஸ்வரர் கோவிலிலும் உள்ள குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.