கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை கால பைரவர் கோவிலில், 20ம் தேதி தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அடுத்த பெரிய ஏரி கோடிக்கரையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவில். இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த பூஜையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள். இந்த மாதத்திற்கான தேய்பிறை அஷ்டமி பூஜை நடக்கிறது.