காளையார்கோவில்,: காளையார்கோவில் சொர்ணவள்ளி அம்மன்கோவில் ஆடிப்பூர உற்சவ விழா, ஜூலை 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று அம்மனுக்கு காலை 5மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 6மணிக்கு அம்மன் தேரில் அமர்த்தினார்கள். 9 மணிக்கு பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. இன்று அம்மனுக்கு ஆடிப்பூரம்,ஆக 6ம் தேதி காலை மணிக்கு தபசுகாட்சி, ஆக 7ம் தேதி காலை 10 மணிக்கு சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்சியும் நடைபெற்றவுள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தானம், ஏஎல்.ஏஆர் அறக்கட்டளைநிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.