பதிவு செய்த நாள்
08
ஆக
2016
11:08
திருப்பதி: விஜயவாடாவில், திருமலை ஏழுமலையான் மாதிரி கோவில் திறக்கப்பட்டது.ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நதியில், வரும், 12ம் தேதி, புஷ்கரம் என்ற புனித நீராடல் நடக்கிறது.
இதற்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானை வழிபட, விஜயவாடாவில் மாதிரி கோவிலை தேவஸ்தானம் ஏற்படுத்தியது. நேற்று காலை, 7:30 மணி முதல் 9:00 மணிக்குள், கிருஷ்ணா நீர் கொண்டு மகாசம்ரோட்சம் செய்து ஏழுமலையான் சிலையை கோவிலுக்குள் பிர திஷ்டை செய்தது. முதலில், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏழுமலையானை தரிசித்தார். அதன்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனும திக்கப்பட்டனர். இங்கு, தினமும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா, நைவேத்தியம் உள்ளிட்ட சேவைகள், ஏழுமலையானுக்கு நடத்தப்பட உள்ளன.