செல்லபிராட்டி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2016 11:08
செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகைக்கு, வளையல் அலங்காரம் செய்தனர். செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் உள்ள லலிதா செல்வாம்பிகை கோவிலில், ஆடிப்பூர விழா நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ திரவிய அபிஷேகம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பூங்களால் அலங்கரித்திருந்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக அம்மனுக்கு சீர் கொண்டு வந்தனர். தொடர்ந்து வளையல்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்தனர். பின், விக்னேஷ்வர பூஜையும், விசேஷ திரவிய ஹோமமும் நடந்தது. ஸ்ரீசக்ர லலிதா சகஸ்ர பூஜையும், சீர் சமர்ப்பனம், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.