மூணாறு: மூணாறில் சத்ய சாய் சேவா ஒருங்கிணைப்பு குழு மற்றும் சத்ய சாய் சேவா அறக்கட்டளை சார்பில் சர்வ ஐஸ்வர்யபூஜை நடந்தது. இதனையொட்டி நடந்த விளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் சஜீவ் உள்பட பலர் பங்கேற்றனர்.