பதிவு செய்த நாள்
08
ஆக
2016
12:08
விழுப்புரம்: சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், சுவாமிகளுக்கு 108 சமயத்தார் தாலி கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு அங்காளம்மன் ஆனந்தாய் பூங்காவனம் கோவிலில், மகா திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, மாலை 5.00 மணியளவில் கணபதி பூஜை, சஷ்டி புண்யாகவாசனம், தேவி ஹோமம், மகா பூர்ணாஹூதி, இரவு ௯:௦௦ மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 8.30௦ மணிக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை, விக்னேஸ்வர பூஜையுடன், யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து, காசி விஸ்வநாதர் ஆலய மகாஷோம தீர்த்தம், அங்காளம்மன் ஆனந்தாய் பூங்காவனம் ராஜதர்பார், மணக்கோலத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 11.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த சிவன், பார்வதி சுவாமிகளுக்கு மகா திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிகளுக்கு, 108 சமயத்தார் தாலி கட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். பிற்பகல் 2.00 மணிக்கு தீப வழிபாடு, மாலை 3.00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு, இரவு 7.00 மணிக்கு அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன.