கடலுார்: குமாரப்பேட்டை வேம்புலி அம்மன் கோவிலில் திரு விளக்கு பூஜை நடந்தது. கடலுார் அடுத்த குமாரப்பேட்டை வேம்புலி அம்மன் கோவிலில் அடி வெள்ளி, உலக அமைதி மற்றும் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 108 திருவிளக்கு பூஜை நடந்தது.