பதிவு செய்த நாள்
08
ஆக
2016
01:08
திருப்பதி: திருமலையில், கருடசேவை சிறப்பாக நடந்தது. திருமலையில், கருட பஞ்சமியை முன்னிட்டு, நேற்று மாலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, கருட வாகனத்தின் மேல் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில், நேற்று காலை, தேவஸ்தான அறங் காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, புதிய லட்டு கவுன்டரை துவக்கி வைத்தார்.