உசிலம்பட்டி: உசிலம்பட்டி புத்துார் மலையடிவாரத்தில் குருவிளாம்பட்டி, போத்தம்பட்டி, பண்ணைப்பட்டி, தொட்டப்பநாயக்கனுார், துலுக்கபட்டி உட்பட பல ஊர்களுக்குப் பாத்தியப்பட்ட சொக் காண்டியம்மன் கோயில் உள்ளது. இங்கு சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. மலைராமன், சொக்காண்டி, மாயன், பேச்சியம்மன், பாப்பார பெரியகருப்பு, பெரியகருப்பு சாமிகளின் புதிய சிலைகளை உசிலம்பட்டி சிற்பக்கூடத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டையும், சிறப்பு மகா அபிஷேகங்களும் நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.