Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்கைக்கு குழந்தை பிறந்துள்ள ... குருவருள் திருவருள் குறித்து ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
05:08

*ஆன்மிகத்தில் சாதிக்க ஏற்றது இளமைக்காலமே. தன்னம்பிக்கை இழக்காமல் மனம் ஒன்றி பிரார்த்தனையில் ஈடுபட்டால் கடவுள் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
*நீ ஒரு பொருளை மதித்தால் மட்டுமே அந்த பொருளும் உன்னை மதிக்கும். எந்த வேலையையும் துச்சமாக கருதாமல் அதற்குரிய மதிப்பை வழங்கி கற்றுக் கொள்.
*மனதில் அமைதி நிலைத்திருக்க விரும்பினால் மற்றவரின் குறைகளைப் பற்றிச் சிந்திக்காதே. அகிலம் முழுவதையும் அன்பால் உந்தன் சொந்தமாக்கிக் கொள்.
*உலகிலுள்ள பிரச்னை அனைத்திற்கும் பணமே மூலகாரணம். பணம் மனிதனின் மனதை சலனப்படுத்தி பாவம் செய்யத் துõண்டுகிறது.
*கீழ்நோக்கிப் பாயும் நீர் போல, மனம் அற்ப விஷயங்களில் நாட்டம் கொள்கிறது. அதை தடுத்து நிறுத்தி உயர்ந்த விஷயங்களில் ஈடுபடுத்த முயற்சியுங்கள்.
*நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள். இந்த இரண்டும் இருந்து விட்டால் எல்லாம் உலகில் இருந்த மாதிரி தான்.
*உடன் இருப்பவர்களுக்கு உன்னால் மகிழ்ச்சியளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.
*கடவுளை நேசித்தால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவனே உலகின் சிறந்த புண்ணியவான்.
*சோம்பலினால் உடல் மட்டுமல்ல. மனமும் கெட்டு விடுகிறது. எப்போதும் சுறுசுறுப்புள்ள பணியில் ஈடுபட்டால் சோம்பல் இடம் தெரியாமல் மறைந்து விடும்.
*கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைப்பது கூடாது. அவன் விலங்கு நிலைக்கு தன்னை தாழ்த்திக் கொள்கிறான்.
*தவறு செய்வது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தால் துன்பமே உண்டாகும். தவறைத் திருத்திக் கொள்வதே சிறந்த பண்பாகும்.
*மனதில் துõய்மை இருக்குமானால் பார்க்கும் காட்சியனைத்தும் பரிசுத்தமானதாகவே இருக்கும். மனதைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது என்பதை மறப்பது கூடாது.
*பேச்சினால் பிறர் மனதைப் புண்படுத்துவது நல்லதல்ல. சுடுமொழிகளைப் பேசுவதால் மனிதனின் சுபாவம் கொடுமையானதாகி விடும்.
*சந்தனம் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, கடவுளைத் தியானிக்கும் மனதில் பக்திமணம் கமழ்ந்து கொண்டே இருக்கும்.
*தியானம், தவம் செய்வதால் மட்டுமே கடவுளின் அருளைப் பெற்று விட முடியும் என்பது உறுதி கிடையாது. விலை கொடுத்து வாங்க கடவுள் ஒன்றும் காய்கறி அல்ல.
*கடவுளின் திருவடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் உலகில் எதற்காகவும், யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியமிருக்காது.

 (மகான் சாரதாதேவியார்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar