ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் புஷ்பாஞ்சலி நடந்தது. இக்கோயில் ஆடிப்பூரவிழாவின் 9ம் நாளன்று தேரோட்டம் நடந்த நிலையில், 10ம் நாளன்று முத்துக்குறி, வேதபிரான் சுதர்சன் பட்டர் புராணம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிறைவு நாளான நேற்று மாலை 6மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு, ரகுராம பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்து புஷ்பாஞ்சலி நடந்தது. இதையொட்டி வாசனை மலர்களால் மண்டபத்தின் முன் பூக்கோலமிட்டு சிறப்பு யாகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர்கள் தலைமையில் அறநிலையத்துறையினர் செய்தனர்.