குன்னுார் : குன்னுார் வெலிங் டன் அருகே, உள்ள கன்னிமாரியம்மன் கோவிலில் கரக உற்சவ விழா நடந்தது. குன்னுார் வெலிங்டன் பகுதியில் கன்டோன்மென்ட் அருகே அமைந்துள்ள கன்னிமாரியம்மன் கோவிலில் ஆண்டு கரக உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி பிருந்தாவன் பகுதியில் இருந்து சிறுமியர் கரகங்களை ஏந்தி பக்தி பரவசத்துடன், ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. தொடர்ந்து, பிரசாத வினியோகம் நடந்தன.