பதிவு செய்த நாள்
09
ஆக
2016
03:08
பொன்னேரி: பொன்னியம்மன் கோவிலில், கூழ் வார்த்தல், வாடை பொங்கல் இடுதல் என, ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், 37ம் ஆண்டு, ஆடி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. 5 மற்றும் 6ம் தேதிகளில், காலையில் காப்பு கட்டுதல், கரகம் புறப்படுதல், மாலையில் பஜனை பாடல்கள், சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை சிறப்பாக நடந்தன. நேற்று முன்தினம் காலை, அம்மனுக்கு கூழ்வார்த்தல், வாடை பொங்கல் இடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு அம்மன் வீதிஉலா நடந்தது. ஆடி திருவிழா நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.