உ.செல்லுார் ஸ்ரீரேணுகா மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2016 02:08
உளுந்துார்பேட்டை: உ.செல்லுார் கிராமத்திலுள்ள ஸ்ரீரேணுகா மாரியம்மன், ஸ்ரீஐயனார், ஸ்ரீவிநாயகர் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா உ.செல்லுார் கிராமத்திலுள்ள ஸ்ரீரேணுகா மாரியம்மன், ஸ்ரீஐயனார், ஸ்ரீவிநாயகர் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி கட்த 5ம் தேதி காலை 7.30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 7ம் தேதி மதியம் 3.30 மணிக்கு கிராம மக்கள் கூழ் குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு சுவாமிகளுக்கு கூழ் படையலிட்டு வழிபட்டனர். இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீரேணுகா மாரியம்மன், ஸ்ரீஐயனார், ஸ்ரீவிநாயகர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு எல்லை பிடாரியம்மனுக்கு உயிர் பலி கொடுக்கப்பட்டு தீபாரதனை வழிபாடு நடந்தது. மதியம் 3 மணிக்கு சுவாமி குதிரை சவாரியும், மாலை 6 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். இன்று(10ம் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா நரசன், வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.