ஆண்டிபட்டி: சக்கம்பட்டி சீலைக்காரியம்மன் கோயில் குல தெய்வ வழிபாட்டு விழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. சீலைக்காரி அம்மன், பரிவார தேவதைகள், கருப்பசாமி, முனீஸ்வரர், அய்யனார் சுவாமிகளுக்கு நள்ளிரவு படையல் செய்து வழிபாடு நடத்தினர். அன்னதானம் நடந்தது.