சத்திரப்பட்டி, சத்திரப்பட்டி ஜெயமாரியம்மன்கோயில் முளைக்கொட்டு விழாவையொட்டி அந்தந்த தெருக்களில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று,நத்தம்பட்டி முக்குரோட்டில் உள்ள துரைமட கிணற்றில் கரைத்தனர். சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் பகுதி பெண்கள் பங்கேற்றனர். இன்று தெருக்களில் மாரியம்மன் வீதிஉலா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 12ல் மஞ்சள் நீராட்டு நடக்கிறது.