கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது. அம்பிகை அவதார தினமான ஆடிப்பூர விசேஷ தினத்தையொட்டி 108 பால்குட பூஜை நடத்தினர். துர்க்கை அம்மனுக்கு கலச ஆவாஹனம் செய்யப்பட்டது. பால்குடங்களை பெண்கள் சுமந்தவாறு கோவிலுக்குள் வலம் வந்து துர்க்கை அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். பூஜைகளை ராமமூர்த்தி சாஸ்திரிகள் செய்து வைத்தார்.