கள்ளக்குறிச்சி விருகாவூர் அம்மனுக்கு ஆடி வளையல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2016 01:08
கள்ளக்குறிச்சி: விருகாவூர் சிவசக்தி அம்மனுக்கு வளையல் திருவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் சர்க்கரை விநாயகர், சீனிவாச பெருமாள், சிவசக்தி அம்மன் கோவிலில் ஆடி உற்சவம் நடந்தது. அதிகாலை விநாயகர் பூஜைக்குப்பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சிவசக்தி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தி, பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் திருக்கல்யாணமும், அம்மனுக்கு வளையல் திருவிழாவும் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் முத்துசாமி, உண்ணாமலை மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.