கிள்ளை: நஞ்சைமகத்து வாழ்க்கை காளிகாம்பாள் மற்றும் காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி பால் குடம் ஊர்வலம் மற்றும் பறக்கும் காவடி உற்சவம் நடந்தது.
விழா, கடந்த 2ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி, சின்னத்தெரு கான்சாகிப் வடிகால் வாய்க்காலில் கரகம் மற்றும் அலகு குத்தி பறக்கும் காவடியுடன் 108 பால்குடம் ஊர்வலம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது. மதியம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.