காரைக்குடி காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் புனித நீர் தெளித்து கொடியை அர்ச்சித்தார். மதுரை புனித மரியன்னை மேல்நிலை பள்ளி அதிபர் ஆரோக்கிய சாமி கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. நவநாட்களில் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், அதனை தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. 14ம் தேதி திவ்ய நற்கருணை விழா, 20ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. திருப்பலி முடிந்ததும் சகாய அன்னையின் திருத்தேர் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறது.