சங்ககிரி: உலக அமைதி பெற வேண்டியும், மழைவளம், விவசாயம் செழிப்படைய வேண்டும் என்பதற்காக நேற்று சங்ககிரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பாக ஆடிப்பூர கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது. சங்ககிரி சோமேஸ்வரர் ஆலயத்தின் முன் தொடங்கிய ஊர்வலம், புதிய இடைப்பாடி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் வந்து பவானி சாலையில் உள்ள கோவிலை அடைந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழி பட்டனர். பின்னர், கலயத்திலிருந்த கஞ்சியை பெரிய பாத்திரத்தில் ஊற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் செய்தனர்.