கடலுார்: கடலுார், ஆனைக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. கடலுார், ஆனைக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 19ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. இதற்கான விழா கடந்த 14ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 3ம் நாளான நேற்று காலை பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று மாலை குத்துவிளக்கு பூஜையும், நாளை கொடியேற்றமும், இரவு அம்மன் வீதியுலாவும், 19ம் தேதி மதியம் சாகை வார்த்தலும், மாலை செடல் திருவிழா நடக்கிறது.