வால்பாறை: வால்பாறையில் ஷீரடிசாய்பாபா ‘தூவாரகாமாயி’ தியான மந்திரில் சிறப்பு பஜனை நடந்தது. வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை கடை வீதியில் ஸ்ரீ ஷுரடிசாய்பாபா ‘தூவாரகாமாயி’ தியான மந்திர் கடந்தாண்டு டிச., மாதம் திறக்கப்பட்டது. இந்த கோவிலில் நாள் தோறும் காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வியாழன்தோறும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஜனை நடக்கிறது. நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் அபிேஷக பூஜையும், ஆராதனையும் நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சாய் செல்வரத்தினம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.