Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பாளையம் ராகவேந்திரர் ... மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
100 ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணி
எழுத்தின் அளவு:
100 ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணி

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
12:08

அன்னுார்: சொக்கம்பாளையத்தில், 100 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் திருப்பணி தீவிரமாக நடக்கிறது. சொக்கம்பாளையத்தில், 100 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், துர்க்கை மற்றும் நவகிரகங்களின் சன்னதிகள் உள்ளன. கோவிலில், சிற்பங்கள் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்படுகிறது. புதிதாக தட்சிணாமூர்த்தி, தண்டாயுதபாணி திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கும்பாபிஷேகம் வரும் செப்.,3ம் தேதி துவங்குகிறது. அன்று மாலையில் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. 4ம் தேதி காலையில் இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மாலையில் மூன்றாம் கால வேள்வி, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 5ம் தேதி காலை நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9:30 மணிக்கு விமானங்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், திருக்குட நன்னீராட்டு நடக்கிறது. மதியம் காரமடை, தாசபளஞ்சிக திருப்பாவை பஜனை குழுவின் பஜனை, பிருந்தாவனம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் சுவாதி திருவீதியுலா நடக்கிறது. பேரூர் மணிவாசகர் மன்றத்தினர் தமிழ்முறைப்படி, வேள்வி பூஜை செய்கின்றனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar