பதிவு செய்த நாள்
22
ஆக
2016
01:08
திருப்பூர்: கரியாம்பாளையம் செல்வ விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன், பொன்ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது; திரளாக பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். திருப்பூர், பெருந்தொழுவு, கரியாம்பாளையத்தில், செல்வ விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன், பொன்ராமர் மற்றும் பரிவாரமூர்த்தி கோவில் உள்ளது. திருப்பணி நிறைவு பெற்றதால், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த, 17ல் தேதி, கிராமசாந்தி நிகழ்ச்சியுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள், கணபதிஹோமத்தை தொடர்ந்து, பெருந்தொழுவு பாண்டீஸ்வர சுவாமி கோவிலில் இருந்து முளைப்பாலிகை நடைபெற்றது. கடந்த, 19ல் யாக சாலைகள் அலங்கரிக்கப்பட்டு, கோபுர கலசங் களுக்கு கண் திறக்கப்பட்டது. நேற்று காலை, 4:00 மணிக்கு சாமிக்கு காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து, கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கின. காலை, 6:45 மணிக்கு, விமான கோபுர கலசங்களுக்கு, சிவச்சார்யார்கள் புனித நீர் ஊற்றினர்; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், 24 நாட்களுக்கு மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.