பதிவு செய்த நாள்
22
ஆக
2016
01:08
பெ.நா.பாளையம்: சின்னதடாகத்தில் பழமையான ஏரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சின்னதடாகத்தில் உள்ள பொன்னேரி வளாகத்தில் நுாறு ஆண்டுகள் பழமையான ஏரி விநாயகர் கோவில் பழுதடைந்து இருந்தது. தற்போது, புனரமைக்கப்பட்டுள்ளது. புதிய கர்ப்ப கிரகம், மகா மண்டபம், கோபுரம் ஆகியன நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, யாசசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, மூலமந்திர யாகம் ஆகியன நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜைகள் துவங்கின. அனுவாவி சுப்பிரமணியர் கோவில் ஆதீஸ்வரன் குருக்கள் கோபுர கலசத்தக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தசதரிசனம், மகா தீபாராதனை, அன்னதானம், நாமசங்கீர்த்தனம் ஆகியன நடந்தன.