குளித்தலை: குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக சிறப்பு பூஜை நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கடம்பனேஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை, 9 மணியளவில், 108 கலச அபிஷேகமும், அம்பாளுக்கு, 108 சங்காபிஷேகமும், விஷேச பூஜைகளுடன் சிறப்பாக நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.