Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி ஞாயிறு விரதம் இருப்பது ஏன்? காஞ்சிபுரம் வந்தால் மூன்று கோடி! காஞ்சிபுரம் வந்தால் மூன்று கோடி!
முதல் பக்கம் » துளிகள்
துன்பம் தீர்க்கும் பைரவர் மந்திரங்கள்!
எழுத்தின் அளவு:
துன்பம் தீர்க்கும் பைரவர் மந்திரங்கள்!

பதிவு செய்த நாள்

24 ஆக
2016
05:08

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் பைரவரும் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், காலபைரவர், சண்ட பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், குரோதண பைரவர், சம்கார பைரவர் மற்றும் பீஷண பைரவர் என்று நவ பைரவர்களாக வழிபடுகின்றார்கள். (இவற்றில் கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

காலபைரவர் தோன்றிய கதை!

இறைவன் பிரபஞ்சத்தை படைத்த காலத்தில் பிரம்மா, விஷ்ணு முதலான தெய்வங்கள் தோன்றினார்கள். ஒரு காலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பேதம் உண்டாயிற்று. இவர்களின் பேதத்தை போக்குவதற்காக இறைவன் சிவபெருமான் ஆதி அந்தம் இல்லாத அக்னி ரூபத்தை காட்டி உங்களில் யார் என் அடி முடியை முதலில் காண்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று கூறினார். பிரம்மாவும், விஷ்ணுவும் உடனே அடி முடியை காண்பதற்காக விரைந்தனர். பல யுகங்கள் கடந்து பயணித்தும் காணமுடியவில்லை, அந்த சமயம் இறைவனின் முடியில் இருந்து வந்த கங்கையை பிரம்மா கண்டார். உடனே நான் எம்பெருமானின் முடியை கண்டேன் என்று பொய் உரைத்தார். அந்த கனத்தில் அக்னி பிழம்பில் இருந்து கடும் உக்ரத்தோடு ஸ்ரீ கால பைரவர் தோன்றி, பிரம்மாவின் ஒரு சிரஸை கொய்தார். இவர் தான் ஸ்ரீ கால பைரவர்  என புராணங்கள் கூறுகிறது.

ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்தை கடுமையான விரதத்தோடு பாராயணம் செய்து வந்தால் பில்லி, சூனியம், ஏவல் மற்றும் எப்பேற்பட்ட தீய சக்திகளிடம் இருந்தும் நம்மை துன்பம் அனுகாது. பைரவருக்குரிய மந்திரங்களில் மூன்று(3) மந்திரங்கள் வருமாறு.

“ஓம் பைரவாய நமஹ”

“ஓம் ப்ராம் பைரவாய நமஹ”

“ஓம் நமோ ருத்ராய கபாலியாய
பைரவாய த்ரைலோக் நாதாய
ஓம் ஹ்ரீம் பட் சுவஹா”

சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ, செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ பைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியில் விளக்கேற்ற வேண்டும்.

தினமும் 48 முறை ஜபம் செய்து வந்தால் துன்பங்களுக்கு துன்பம் தரும் தூய சக்தியாகி விடுவோம்.  பைரவர் சன்னதிக்கு சென்றது முதல் வீடு திரும்பும் வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அசைவ உணவு பழக்கம் முழுவதுமாக தவிர்த்திட வேண்டும். சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஜபம் செய்து வருவது நல்ல பலன்களை உணரலாம்.

ஓம் பைரவாய நமஹ!

 
மேலும் துளிகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
மைசூரு: சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.மைசூரு சாமுண்டி ... மேலும்
 
temple news
சிவனுடன் மகரிஷி ரிஷ்ய சிருங்கர், ஒளியாக கலந்து மான் கொம்பு, மீசை, தாடியுடன் காட்சியளிக்கும் சிவனை ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா பெல்தங்கடி தாலுகாவில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் நேத்ராவதி ... மேலும்
 
temple news
மாண்டியாவின் கே.எம். தொட்டி அருகே அனுமந்த நகர் கிராமத்தில் அமைந்துள்ளது ஆத்ம லிங்கேஸ்வரா கோவில். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar