காஞ்சிபுரத்தில் மூன்று கோடி இருக்கிறது தெரியுமா என்று ஒருமுறை மகாபெரியவர் பக்தர்களிடம் சொன்னார். அவர்கள் என்னவென்று அறிய ஆவலாய் இருப்பதாகச் சொல்ல, பெரியவர் விளக்கமளித்தார். காமாட்சி கோவில் கருவறை மேல் காமகோடி விமானம், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கருவறை மேல் ருத்ர கோடி விமானம், வரதராஜப் பெருமாள் கோவில் கருவறை மேல் புண்யகோடி விமானம். இது தான் மூன்று கோடி என்றார். காஞ்சிபுரம் வந்தால், இனி இந்த மூன்று கோடி தரிசனத்தையும் கண்களில் அள்ளிச் செல்லுங்கள்.