* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம். * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ஆணவம் நீங்கும். * ஆழ்ந்த நம்பிக்கையே நோயாளிக்குத் தேவையான மருந்து. * எந்தளவுக்கு கடவுளை அறிகிறோமோ, அந்தளவுக்கு துன்பம் மறையும். * உண்மை அற்றவர்களை சந்தித்தால் மனம் சோர்வடையும். * தீய பழக்கத்தை விடுவது எளிதல்ல. தளராத உறுதியுடன் எதிர் கொள். * அனைத்தையும் தனக்கென வைப்பது பக்தியல்ல; தன்னையே அர்ப்பணிப்பது பக்தி. * குழந்தைகளுக்கு நினைவாற்றலை விட புரிந்து கொள்ளும் திறனே முக்கியம். * வெற்றி பெற நினைத்தால் மனதை ஒருமுகப்படுத்துவது அவசியம். * தொண்டு செய்வது என்பது கடவுளை வணங்குவதற்கு சமம். * மேகத்தை கலைக்கும் சூரியன் போல, பிரச்னைகளை ஒரு புன்சிரிப்பு கலைத்து விடும். * பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையிடாதே. * நம்பிக்கையுடன் கடவுளிடம் பிரார்த்தனை செய். கேட்டது கிடைக்கும். * அறிவு வளர வளர அறியாமையின் இயல்பை புரிந்து கொள்வாய். * ஆன்மிகத்தில் முன்னேற விரும்பினால் போராட தயாராக இரு.